- Your shopping cart is empty!
New Paleo Combo - 3 books
Ex Tax: ₹525.00
For orders whatsapp: +919445951115
நனிசைவ டயட் - By Kirthika Tharan
21 நாட்கள் டிடாக்ஸ் குழுவில் பரிந்துரைக்கும் ராவேகனை ஒட்டிய எடைக் குறைப்பு டயட் பற்றிய விளக்கங்கள் மற்றும் அதனால் பலனடைந்தவர்களின் அனுபவங்கள். சாம்பிள் ரெசிபிகள் அடங்கிய தொகுப்பு. பால், தேன் கூட இல்லாத தூய நனிசைவ டயட்டை பின்பற்ற விரும்பும் மக்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு முழுமையான புரிதலைக் கொடுக்கும்.
பேலியோ டயட் - குணமாகும் நோய்கள் - By Dr A P Farooq Abdulla.
நம்முடைய தவறான உணவு காரணம் வரும் பிரச்னைகள், பேலியோ உணவுமுறை மூலம் எப்படி சரியாகிறது? இதன் பின் இருக்கும் அறிவியல் என்ன என்று எளிய தமிழில் அருமையாக விளக்கி மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் இது.
பேலியோவை மருந்தாக, சிகிச்சையாகப் பார்க்காமல் நல்லுணவின் அறிவியல் அதனால் எப்படி நமக்கு நன்மைகள் ஏற்படுகிறது என்று அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
பேலியோ டயட் சார்ட் ரெசிபிகள் - By தேன்மொழி அழகேசன்
பேலியோவில் பரிந்துரைக்கப்படும் உணவுப்பரிந்துரை அடிப்படையில் 30 நாட்களுக்கு தினம் காலை, மதியம், இரவு என்ன உண்ணலாம் என்று தனித்தனி ரெசிபிகள் அடங்கிய புத்தகம். சைவம் அசைவம் இரண்டும் தனித்தனிப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே புத்தகமாக கொண்டுவந்திருக்கிறோம்.
இன்று என்ன சமைக்கவேண்டும்? நாளை என்ன சமைக்கவேண்டும் போன்ற குழப்பங்களைத் தீர்க்க உதவுவதோடு, உணவுப்பரிந்துரையை ஒட்டிய ரெசிபிகள் என்பதால் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக்க் கொண்டு நீங்களே போரடிக்காத பேலியோ உணவுகளைப் பட்டியலிட்டு ரசித்து உண்டு பேலியோவைப் பின்பற்ற முடியும்.
தேன்மொழி அழகேசன் அவர்களின் முதல் ரெசிபி புத்தகம் இது. பேலியோ சமையல் பற்றி தெளிவில்லாதவர்களுக்கும், ஒரே போல சமைத்து போரடித்து பேலியோ முயற்சிப்பவர்களுக்கும், புதியதாக பேலியோவை முயற்சிப்பவர்களுக்கும் ஒரு ஆபத்துதவியாக இந்தப் புத்தகம் இருக்கும்.